Monday, April 12, 2010

கண்ணாமூச்சு ஏனடி ?












விண்ணிலிருக்கும் நிலவே
என்
விழியில் விழுந்து விட்ட
கனவு (தேவதை) நீ !
heart

புன்னகைக்கும் தாமரையில்
பூத்திருக்கும் தேன்
நீ !
heart

இசைத்திருக்கும் தமிழில்
இனித்திருக்கும் ஸ்ருதி
நீ !
heart

அடர்ந்த கானகத்தின்
படர்ந்திருக்கும் பசுமையும்
நீ!
heart

ஒளிந்திருக்கும் குழந்தையை
தொட்டு பிடிக்கும்போது உதிரும்
கள்ளமில்லா சிரிப்பு
நீ!
heart

தூக்கம் கெடுத்து கனவு தந்தாய்,
ஏக்கம் தொடுத்து நினைவு செய்தாய்,
உன் காதல் கொடுத்து, என் உயிர் கொய்தாய்,
நீ!
Innocent

சிந்தித்து பார்த்தேன், நீ தான் நிறைந்திருந்தாய்
சந்திக்க நினைத்தேன், ஒளிந்து மறைந்தாய்
சோர்ந்து போனேன்,
Crying
.
.
.
.
.
.
.
Love
வாழ்வில் வந்து மலர்ந்தாய்,
காதல் தேவதையாய்,
என் வாழ்க்கை துணைவியாய்!
Love

எதிரொலி











இன்று-
உணவகத்தில் சாப்பிடும் போதெல்லாம்
ஞாபகம் வருகிறது...... Oups

அன்று-
அம்மாவிடம் கோபித்து
உணவு வேண்டாம் என்று சென்ற
நாட்களெல்லாம்......... Crying

Wednesday, April 7, 2010

நாங்கள் இன்னும் வீழ்ந்து விடவில்லை

நாங்கள் வீறுகொண்டு எழ நாட்கள் இல்லை,
நல்ல நேரம் தேவையில்லை ,
இப்போது கூட நாங்கள் வீழ்ந்து விடவில்லை.

காற்றடிக்கும் போது ஆடும்
அகிலமெல்லாம் கிளை
விட்டிருக்கும் ஆல மரத்தின் இலை.
அதக்காக ஆல மரமே வீழ்ந்து விட்டது
என்று சொல்வது மடமை.

மேற்கே மறைந்திருக்கு சூரியன் தான் எங்கள் நிலை.
எப்போதும் இல்லாத நெருப்பு தணல்களோடு
மீண்டும் கிழக்கே வேங்கைகளாய் எழும் நேரமும் தூரமில்லை.

இப்போது ஆணவத்தோடு சிரித்துருப்பவர்களுக்கு ,
அப்போது புரிய வைப்போம் எங்கள் வீரத்தின் மகிமையை ....

அப்போது விண்ணையும் பிளக்கும்
எங்கள் "விர வேல் , வெற்றி வேல்" என்னும் முழக்கம்..

---எப்போதும் எங்கேயும் தமிழன் வினோ

Monday, May 11, 2009

உதிர்ந்த காதல்


உதிர்ந்த காதல்

பகலிலேயே தொலைந்து போகிறேன், 
காலம் தட்டி விட்ட , 
காதல் தூசுகளாய்..
உந்தன் மலரும் நினைவுகளில்...
                                                        - எப்போதும் உங்களின் வினோ

Tuesday, April 28, 2009

என் வெற்றியின் இரகசியம்

வாரணம் ஆயிரம் 
பலம் வேண்டாம்.
பாதாளம் வரை பாயும் 
பணம் வேண்டாம் .
உலகமே அடிமையாகும் 
புகழ் வேண்டாம்.
முனிவர் கேட்ட 'கவண் கல்லெறி' 
பொன் வேண்டாம்,
பொருள் வேண்டாம்.

தோழியே !
பக்கபலமாய்
உன் நட்பு மட்டும் போதும்,
 
நான் வாழ்கை என்னும் போர்க்களத்தில்
வெற்றி வாகை சூட..  
- எப்போதும் உங்களின் வினோ

Monday, April 27, 2009

உந்தன் கோபத்தில்

 ஆயிரம் தோல்விகள் 
வந்த போதும்
துவளவில்லை,

அகிலமே
என்னை எதிர்த்த போதும்
வீழ்ந்துவிடவில்லை,

ஆனால் தோழியே,
உன் கடுகளவு கோபத்தில்,

என் சுவாசமும் 
என்னை விட்டு தள்ளி நிற்கிறது!  
என் நிழல் கூட
எனக்கு எதிரியாய் திரிகிறது!

- எப்போதும் உங்களின் வினோ

Sunday, April 26, 2009

ஏன் ?

உனது 
இதழ்கள்
ஈரமாகும் போதெல்லாம் 
எனது 
வீரம் காணாமல் போகிறதே !
- எப்போதும் உங்களின் வினோ