Wednesday, April 7, 2010

நாங்கள் இன்னும் வீழ்ந்து விடவில்லை

நாங்கள் வீறுகொண்டு எழ நாட்கள் இல்லை,
நல்ல நேரம் தேவையில்லை ,
இப்போது கூட நாங்கள் வீழ்ந்து விடவில்லை.

காற்றடிக்கும் போது ஆடும்
அகிலமெல்லாம் கிளை
விட்டிருக்கும் ஆல மரத்தின் இலை.
அதக்காக ஆல மரமே வீழ்ந்து விட்டது
என்று சொல்வது மடமை.

மேற்கே மறைந்திருக்கு சூரியன் தான் எங்கள் நிலை.
எப்போதும் இல்லாத நெருப்பு தணல்களோடு
மீண்டும் கிழக்கே வேங்கைகளாய் எழும் நேரமும் தூரமில்லை.

இப்போது ஆணவத்தோடு சிரித்துருப்பவர்களுக்கு ,
அப்போது புரிய வைப்போம் எங்கள் வீரத்தின் மகிமையை ....

அப்போது விண்ணையும் பிளக்கும்
எங்கள் "விர வேல் , வெற்றி வேல்" என்னும் முழக்கம்..

---எப்போதும் எங்கேயும் தமிழன் வினோ

No comments:

Post a Comment