ஆயிரம் தோல்விகள்
வந்த போதும்
துவளவில்லை,
அகிலமே
என்னை எதிர்த்த போதும்
வீழ்ந்துவிடவில்லை,
ஆனால் தோழியே,
உன் கடுகளவு கோபத்தில்,
என் சுவாசமும்
என்னை விட்டு தள்ளி நிற்கிறது!
என் நிழல் கூட
எனக்கு எதிரியாய் திரிகிறது!
- எப்போதும் உங்களின் வினோ
No comments:
Post a Comment