skip to main
|
skip to sidebar
En kavithaigal
Monday, May 11, 2009
உதிர்ந்த காதல்
உதிர்ந்த காதல்
பகலிலேயே தொலைந்து போகிறேன்,
காலம் தட்டி விட்ட ,
காதல்
தூசுகளாய்..
உந்தன் மலரும் நினைவுகளில்...
- எப்போதும் உங்களின் வினோ
Tuesday, April 28, 2009
என் வெற்றியின் இரகசியம்
வாரணம் ஆயிரம்
பலம் வேண்டாம்.
பாதாளம் வரை பாயும்
பணம் வேண்டாம் .
உலகமே அடிமையாகும்
புகழ் வேண்டாம்.
முனிவர் கேட்ட '
கவண் கல்லெறி'
பொன் வேண்டாம்,
பொருள் வேண்டாம்.
தோழியே !
பக்கபலமாய்
உன் நட்பு மட்டும் போதும்,
நான் வாழ்கை என்னும் போர்க்களத்தில்
வெற்றி வாகை சூட..
- எப்போதும் உங்களின் வினோ
Monday, April 27, 2009
உந்தன் கோபத்தில்
ஆயிரம் தோல்விகள்
வந்த போதும்
துவளவில்லை,
அகிலமே
என்னை எதிர்த்த போதும்
வீழ்ந்துவிடவில்லை,
ஆனால் தோழியே,
உன் கடுகளவு கோபத்தில்,
என் சுவாசமும்
என்னை விட்டு தள்ளி நிற்கிறது!
என் நிழல் கூட
எனக்கு
எதிரியாய்
திரிகிறது!
-
எப்போதும் உங்களின் வினோ
Sunday, April 26, 2009
ஏன் ?
உனது
இதழ்கள்
ஈரமாகும் போதெல்லாம்
எனது
வீரம் காணாமல் போகிற
தே
!
- எப்போதும் உங்களின் வினோ
Saturday, April 25, 2009
ஹைக்கூ
சுழலும்
இரு சொர்கம்
அவள் விழிகள்...
-எப்போதும் உங்களின் வினோ
Thursday, April 23, 2009
என்னைப் பற்றி
என்னைப் பற்றி
நான் இயற்கையின் பிள்ளை,
விதிகளும் வரம்புகளும்
எனக்கில்லை,
சங்கத்தமிழர் வகுத்த
கோட்பாடுகளே
என் வாழ்வின் நாகரீக எல்லை,
தினமும் தாயென வணங்குகிறேன்
தமிழ் என்னும் சொல்லை...
.
- எப்போதும் உங்களின் வினோ
Tuesday, April 14, 2009
சித்திரை திருநாள்
ஆதவன் அனலாய் அவதரிக்க
தீமைகள் எரிந்து,
நன்மைகளை மேலும் செம்மையாக்கும்
திருநாள்.
உழைப்பால் உயரும் தமிழரின்
வாழ்வெல்லாம் வசந்த காலமாய்
ஒளிர வைக்கும்
இன்பத் திருநாள்.
நாணல் என நிலம் நோக்கும்
வெட்கத்தில் கீழ்வானம் தோற்க்கும்
தமிழ்ப் பெண்ணின்,
புன்னகைப் போல்
மத்தாப்புப் பூக்கும் சித்திரைத் திருநாள்.
வள்
ளுவனின்
வாக்காய்
சோழரின் வம்சமாய் வாழ்ந்திருக்கும்,
திரைக் கடல் ஓடி திரவியம் தேடும்
தமிழருக்கும்,
தாய்மண்ணை தங்கமாய் மாற்றி கொண்டிருக்கும்
மறத்தமிழருக்கும்
என் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இந்தப் புத்தாண்டிலாவது
எங்கள் இலங்கை தமிழரின்
வாழ்வெல்லாம் அமைதி பூக்க
தமிழ்
கடவுள் வேலனிடம்
என் கோடான கோடி பிரார்த்தனைகள்.
- எப்போதும் உங்களின் வினோ
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Followers
Blog Archive
►
2010
(3)
►
April
(3)
▼
2009
(7)
▼
May
(1)
உதிர்ந்த காதல்
►
April
(6)
என் வெற்றியின் இரகசியம்
உந்தன் கோபத்தில்
ஏன் ?
ஹைக்கூ
என்னைப் பற்றி
சித்திரை திருநாள்
About Me
Tamilan
நான் இயற்கையின் பிள்ளை, விதிகளும் வரம்புகளும் எனக்கில்லை, சங்கத்தமிழர் வகுத்த கோட்பாடுகளே என் வாழ்வின் நாகரீக எல்லை, தினமும் தாயென வணங்குகிறேன் தமிழ் என்னும் சொல்லை.... - எப்போதும் உங்களின் வினோ
View my complete profile