விண்ணிலிருக்கும் நிலவே
என்
விழியில் விழுந்து விட்ட
கனவு (தேவதை) நீ !
புன்னகைக்கும் தாமரையில்
பூத்திருக்கும் தேன்
நீ !
இசைத்திருக்கும் தமிழில்
இனித்திருக்கும் ஸ்ருதி
நீ !
அடர்ந்த கானகத்தின்
படர்ந்திருக்கும் பசுமையும்
நீ!
ஒளிந்திருக்கும் குழந்தையை
தொட்டு பிடிக்கும்போது உதிரும்
கள்ளமில்லா சிரிப்பு
நீ!
தூக்கம் கெடுத்து கனவு தந்தாய்,
ஏக்கம் தொடுத்து நினைவு செய்தாய்,
உன் காதல் கொடுத்து, என் உயிர் கொய்தாய்,
நீ!
சிந்தித்து பார்த்தேன், நீ தான் நிறைந்திருந்தாய்
சந்திக்க நினைத்தேன், ஒளிந்து மறைந்தாய்
சோர்ந்து போனேன்,
.
.
.
.
.
.
.
வாழ்வில் வந்து மலர்ந்தாய்,
காதல் தேவதையாய்,
என் வாழ்க்கை துணைவியாய்!